Thursday, December 30, 2010
Sunday, December 26, 2010
தண்ணீரில் உறைந்த கண்ணீர்
{இது கவிதை என்றோ கதை என்றோ சொல்ல முடியாது,பெற்றோர்களை பிரிந்த ஒரு பையனின்
வரிகள்}
26/12/2004
திருநாளின் கோலகலங்கள் கண் முன்னே நிற்க,
அதன் சோர்வில் நான் உறங்க,அந்த வேகத்திலே,
பொழுதும் விடிய.அப்பாவின் கரங்களால் நான்
எழுபபட்டேன்.வா கடற்கரைக்கு போகலாம்
என்ற ஒலியை கேட்டேன்,மகிழ்ச்சியாக
இருந்தாலும்,உடல் விடைகொடுக்க வில்லை,
வரவில்லை என்றேன்.பெற்றோர்கள் கிளம்ப
பெருமூச்சுடன் மீண்டும் உறங்கினேன்.
எழுந்த பொழுது நேரம் 10மணி20நிமிடங்கள்.
அம்மா ,அப்பா என்றேன்,கத்தினேன்,அலறினேன்
சத்தமில்லை,கைபேசியில் அழைக்கலாம்,அனால்
அதுவும் வீட்டிலே உறங்கியது.கண்ணீர் மெல்ல
முளைத்தது,கதவை திறந்து,மெல்ல நடக்க.
ஒரே அலறல் சத்தம்,அப்பாவின் நண்பர்
அங்கு வர,அவரிடம் சேர்ந்து தேட ஆரம்பித்தேன்.
கடற்கரையை அடைந்தோம்.
அதிசயமாய் தோன்றியது,அக்காட்சி.
சாலை முழுக்க தண்ணீர்,அதில் நீந்திய உடல்கள்
விடியலில் எழுப்பிய குரல்கள்,விண்ணில் கலந்து விட்டதோ?
பின் என்னை அவர் வீட்டில் அமரச்செய்து விட்டு.மீண்டும்
தேடல் தொடங்கியது,எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இன்று வரை முடிய வில்லை
அந்த தேடல்.
தேடலின் முற்றுப்புள்ளி என் முடிவில் தான் பிறக்கும்.
உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசை,அதனால்
என் கண்ணீரை கடலில் கலக்கிறேன்,அது உங்களை
வந்து சேரும் என்று.
26/12/1010
Pray to GOD,that we should'nt pray for this again in our life
-Ragul