ஆயிரம் கோடி நெஞ்சங்களின் ஆயுளை தாங்கும் பூமி இது,
மாற்றிடம் தேடி வந்தவர்களை வேந்தர்களாக மாற்றியது ,
நான்கு வேதங்கள் கற்றுரிந்தும் வேதனைகளே வரமானது ,
இருநூறு வருட கதை இது,,
இரண்டாயிர வருட புகழை உயர்த்தியது.
வெள்ளை அணுக்களை ஈர்த்த மண்ணே,
பொன் தேடி வந்து, மண்ணை கைப்பற்றினான்,
மண்ணை கைப்பற்றி,எங்கள் உயிரை கைப்பற்றினான்.
அனால் அவன் செய்த பிழை.
உயிரை கேட்டிருந்தால் கூட தந்திருப்போம்,ஆனால்
அவன் கேட்டது எங்கள் தாய் நாட்டை.
பொங்கி எழுந்த பாரதம் ,போராட தொடங்கியது,
இது வரை நாம் காணாத படை,ஆயுதம்,வளர்ச்சி.
கொஞ்சம் அச்சம்,தயக்கம்,ஆனால் போராடினோம்,
பயந்து அவன் காலில் அழுகி விழுந்தான் துரோகி
வீரத்துடன் மண்ணில் விதையாய் விழுந்தான் தியாகி ...
மொழிகள்,மதம்,இனம் எல்லாம் தோற்ற நேரம் அது
முழு நேர இந்தியனாக உழைத்த நேரம் அது.
ஒவொரு பூக்கள் பூமியில் விழ விழ,எண்ணற்ற
மரங்கள் முளைத்தது,அஞ்சவில்லை அந்த 24 படிகளை கடக்க.
ஒவொரு நாளும் வரலாறு ஆனது,ஆனால் அது சுகம் அல்ல ரணம்
புன்னகையை தொலைத்த தேசம்,அதை தேடியதால் சிறை வாசம்
யார் நாட்டை யார் ஆள்வது?.
சுகந்திர காற்றை ஸ்வசிதே இறக்க,மீண்டும் பிறக்க.
ஒவொரு இந்தியனின் கணவனது..
வருடங்கள் கரைய கரைய,தாய் மண் சிவக்க சிவக்க
பெரும் தலைவர்களின் தலை புரள,உயிரின் எண்ணிக்கை குறைய
நதிகளின் உயரத்தை எங்கள் கண்ணீர் உயர்த்தியது.
இருளில் ஒளியை ஏந்தி வந்த மகா ஆத்மாக்கள் ,போராட்ட
விதிகளை வகுக்க,வாலை ஏந்திய கைகள்,அஹிம்சையை ஏந்தியது
வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கம் விண்ணை தொட்டது
ஆனால் அவர் காதில் மட்டும் விழவில்லை.
ஆடைகளை எரித்தோம் அவன் ஆணவத்தை எரித்தோம்.
உணவை துரந்தோம்,மக்களின் உணர்வை வளர்த்தோம்
இனிமேலும் பொறுக்க முடியாது என ஆங்கிலேயன் ,
பின்வாங்க,நாங்கள் முன்னேற ஆரம்பித்தோம்.
1947 ஆகஸ்ட் 15,இந்தியா சுதந்திரம் பெற்றது.
செய்தியின் இனிமையை மக்கள் மெய்மறந்து கேற்றனர்.
இந்தியன் இனைய,இந்தியா பிரிந்தது,இரு நாடாக,இரு இனமாக.
கனவுகள் மெய்பட,நிம்மதி திரும்பித,மூவர்ண கொடி,விண்ணை பிளக்க
எங்கும் ஒலித்தது "வந்தே மாதரம்,வந்தே மாதரம்".
இனி எல்லாம் எங்களுடையது.
எங்கள் நாட்டை நாங்கள் ஆல ஆரம்பித்தோம்.
ஒவொரு திசையும் இந்தியா ,முக்கடலில் கரைத்தோம்
எங்கள் முர்பிறப்பை ,பயணங்களை தொடர்ந்தோம்
முன்னேற்றத்தை அடைய.
குடியரசு என்ற பெருமை ,மக்கள் ஆட்சியே என்ற உரிமை.
ஆனாலும் எல்லாம் ஓர் புதிரை போல் தோன்றியது,எம் மக்களுக்கு.
நாம் வளர்ச்சி பெறுவோமா என்று,எத்தனை குறைகள் எம்மிடம்.
எத்தனை வளங்கள் ,எல்லாம் அவன் கையில்.
மிஞ்சியது வெறும் மண் மட்டுமே,கூட கொஞ்சம் நம்பிக்கை
எல்லாம் மெல்ல மெல்ல மாற.வருத்தங்கள் மாறியது,
மக்களின் வாழ்கை மாறியதா!
ஒரு பக்கம் வெற்றிகள் ,ஒரு பக்கம் வேதனைகள்!
மீண்டும் எபோது நாம் இனம்,மொழி, கடந்து,
இந்தியனவோம்!
இக்கேள்வியின் பதிலை , தள்ளி வைப்போம்.
தடைகள் இல்லையேல் வெற்றி இல்லை,
நாம் நாட்டை உயர்த்த படுபத்த,உன்னத மக்களை
போற்றுவோம்,விரைவில்,நம் கனவை உலகமே காணும்!
எதிர்காலத்தை நாம் உருவாக்குவோம்,
இந்தியனாக
இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment